மக்களுக்கு என்ன பிரச்சனை என்பதைப் பற்றி ஸ்டாலினுக்கு கவலையில்லை: ஈபிஎஸ்

மக்களுக்கு என்ன பிரச்சனை என்பதைப் பற்றி ஸ்டாலினுக்கு கவலையில்லை: ஈபிஎஸ்
X

EPS

மக்களுக்கு என்ன பிரச்சனை என்பதைப் பற்றி ஸ்டாலினுக்கு கவலையில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுச்சிப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் நிறுத்தி வைப்பதுதான் திமுக மாடல் அரசின் நான்கு ஆண்டு சாதனை. இலவச மடிக்கணினி வழங்கி ஏழை மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வி கிடைக்ககூடிய சூழ்நிலையை அதிமுக அரசு உருவாக்கித் தந்தது. ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பது கூட பொறுக்க முடியாமல், அம்மா Mini Clinic ஐ ரத்து செய்த முதலமைச்சர் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டன. காழ்ப்புணர்ச்சியால் அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக நிறுத்தியது. திமுக ஆட்சியில் எந்த புதிய திட்டமும் கொண்டுவரப்பட்டதாக தெரியவில்லை. ED, IT ரெய்டு பற்றி கவலையில்லாத தொழில் விவசாயம்.விவசாயிகளுக்கு திட்டங்களை கொண்டுவந்தது அதிமுக, அதிமுக ஆட்சியில் 6,000 ஏரிகள் தூர்வாரப்பட்டது.விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கிய ஒரே அரசு அதிமுக. 2026ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் திருமண உதவித்திட்டமான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடரும். மக்களுக்கு என்ன பிரச்சனை என்பதைப் பற்றி ஸ்டாலினுக்கு கவலையில்லை. அவரது குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால் போதும். 140 தேசிய விருதுகளை பெற்ற அரசு அதிமுக திறமையான அரசுக்கு இதுவே சான்று. தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை... ஆனால் 98% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய் பேசி வருகிறார் எனக் குற்றம் சாட்டினார்.

Next Story