பழனிசாமியை ஆட்சியில் அமர வைப்பது நமது கடமை: அண்ணாமலை

பழனிசாமியை ஆட்சியில் அமர வைப்பது நமது கடமை: அண்ணாமலை
X

annamalai

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டியது என்.டி.ஏ. தொண்டர்களின் கடமை என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நெல்லை தச்சநல்லூர் பகுதியில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு இன்று மாலை நடைபெற இருக்கிறது. இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் உரையாற்றிய பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டியது என்.டி.ஏ. தொண்டர்களின் கடமை. எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும். பூத் பொறுப்பாளர்கள் அடுத்த 8 மாதம் கடுமையாக உழைக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கையும் சேகரிக்க வேண்டும். பாஜகவினர் தமிழகத்தில் பெரிய மாற்றத்துக்கு பாடுபட வேண்டும். 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்தார்.

Next Story