தவறாக பேசாதீர்கள் விஜய்; பின் விளைவுகளை சந்திக்க நேரிடுவீர்கள்: நடிகர் சரத்குமார்

sarathkumar
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் பகுதியில் நடிகர் சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது இதில் பாஜகவினுடைய மாநில தலைவர் மற்றும் பாஜகவினுடைய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் உள்ளிட்டோர் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் டேப் மற்றும் கண் கண்ணாடிகள் மற்றும் காது கேளாத மெஷின் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய நடிகர் சரத்குமார் திடீரென ஆவேசத்துடன் உனக்கு என்ன தெரியும் என நடிகர் விஜய்யை சூசகமாக கூறி பிரதமர் மோடியின் பெயரையும் தமிழக முதல்வரை அங்கிள் என கூறுவதையும் ஏற்க முடியாது கண்டிக்கத்தக்கது எனவும் அரசியல் நாகரிகம் தெரிந்து பேச வேண்டும் எனவும் அவர் பேசினார் மேலும் நீட்டை ஒழிக்க வேண்டும் எனவும் பேசிய விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக நீட்டைக் கொண்டு வந்தது யார் யார் ஆட்சியில் அதை அனுமதித்தார்கள் என்று தெரிந்து பேச வேண்டும் நீட்டல் பயன் இல்லையா நீட்டால் 6 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாய் வரையில் பணம் கட்டி படிப்பில் சேர்ந்தவர்கள் இல்லாமல் ஏழை எளிய மாணவர்கள் படிக்கிறார்கள் இது தேவையில்லையா , அடுத்ததாக பாசிசத்தை பற்றி பேசுவதாகவும் பிரதமர் மோடிஜியும் மோடிஜின் அரசும் பாசிசத்தை செய்யவில்லை எனவும் , முஸ்லிம்களுக்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுகிறார் எனவும் காஷ்மீரில் 25 தொகுதிகளை வென்ற போது முஸ்லிம் மக்கள் பாரதிய ஜனதா கட்சியை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் என்ன எனவும் அரேபிய நாட்டில் இந்துக்களுக்கு என கோவில் கட்டியதற்கு மோடிஜி தான் காரணம் எனவும் சரத்குமார் சூளுரை மேற்கொண்டார் தொடர்ந்து, தேவையற்ற காட்சிகளை செய்ய முற்படாதீர்கள் விளைவுகளை சந்திக்க நேரிடும் ,மீனவர்கள் பாதிக்கபட்டுள்ளனர் எனவும் அதற்கு மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 6 மீனவர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றினார் ,ஒரு மீனவர் சாவு கூட நடக்கவில்லை உன்னிடம் ஆதாரம் இருக்கிறதா விஜய் என கடும் தாக்கு ! ஒரு உண்ணத தலைவரை இழுவு படுத்தாதே ,கச்சதீவை மீட்டு தாருங்கள் என சொல்றார் கச்சதீவ யாரு கொடுத்தா திமுக - காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்தார் அப்போது தடுத்தது அட்டல் பிகாரி வாஜ்பாய் ,உனக்கு இந்த தகவல் தெரியுமா விஜய் என மேடையில் காரசாரமாக பேசிய சரத்குமார்.வாஜ்பாய் தடுத்தார் கலைஞர் கொடுத்தார் என பேச்சு.தவறான செய்திகளை விஜய் பரப்புகிறார் எனவும் ,திமுக ஆட்சியில் ஆணவ கொலை ,கொலை சம்பவங்கள் நடக்கிறது ,போதைக்கு இளைஞர்கள் அதிகம் அடிமையாகின்றனர். தொடர்ந்து செய்தியாளரிடம் பேட்டி அளித்த நடிகர் சரத்குமார் விஜய் தாவேகா மாநாட்டில் பிரதமர் மற்றும் முதலமைச்சருக்கு குறித்து பேசியது என்னவாக இருக்கிறது என கேட்டபோது அவர் அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசுவதாகவும் பாராளுமன்ற தேர்தலில் நின்று வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்குள் சென்று மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என சொல்லுங்கள் இப்போது சொல்ல வேண்டாம் என பேட்டி அளித்தார் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் பற்றி கேட்காதீர்கள் அவர்கள் கொள்கையே இல்லை அது கட்சியே இல்லை என்ன கொள்கை என்று அவர்களுக்கு தெரியவில்லை முதலில் கொள்கையை பற்றி அவர்கள் சொல்லட்டும் பிறகு அந்த கட்சியை பற்றி பேசுவோம் என தமிழக வெற்றிக்கழகத்தை சரமாரியாக சாடிய சரத்குமார்.
