ஜெகதீப் தாங்கரை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார்கள்! முன்னாள் துணைக் குடியரசுத் தலைவருக்கே இந்த கதி: திருமா

ஜெகதீப் தாங்கரை வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார்கள்! முன்னாள் துணைக் குடியரசுத் தலைவருக்கே இந்த கதி: திருமா
X

thiruma

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கரை கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்து அவரை அச்சுறுத்தி வீட்டுச் சிறையில் வைத்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்,

சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்திய கூட்டணி கட்சியின் சார்பாக குடியரசு துனண தலைவருக்கான தேர்தலில் போட்டியிடும் சுதர்சன் ரெட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், “துணை குடியரசு தலைவர் தேர்தலில் இந்திய எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் நீதி அரசர் சுதர்சன் ரெட்டி சென்னைக்கு வருகை தந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கோரினார். குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் நீதி அரசர் சுதர்சன் ரெட்டி அவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி அவருக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்றும் கடந்த காலங்களில் அவரது பங்களிப்பு குறித்தும் விரிவாக பேசினார். வேட்பாளர் சுதர்சன் ரெட்டி அவர்களும் கடந்த காலத்தில் நீதித்துறையில் அரசமைப்பு சட்டத்தின் சிறப்பு கூறுகளை பாதுகாப்பதற்காக அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்து பகிர்ந்து கொண்டார். கடந்த காலத்தில் குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர் அவர்களை கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்து மேலும் அவரை அச்சுறுத்தி வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறார்கள். குடியரசு துணைத் தலைவருக்கே இந்த நிலை என்று சொன்னால் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிலை என்ன என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவருக்கு ஏற்பட்ட நிலைதான் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே பாரதிய ஜனதாவின் கட்டுக்குள் முடங்கிப் போகக்கூடிய ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுப்பதை விட சுதந்திரமாக சிந்தித்து செயல்படவும் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் பணியாற்றவும் வாய்ப்பை பெற்றுள்ள வல்லமை பெற்றுள்ள வேட்பாளர் நீதியரசர் சுதர்சன் ரெட்டி அவர்களை ஆதரிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளோம். இந்த அரசு பாஜக பாசிச அரசு என்பதற்கு ஜெக்தீப் தன்கர் அவர்களுக்கு கொடுத்த நெருக்கடியில் இருந்து தெரிந்து கொள்ள முடியும். பாசிச சக்திகளை மக்களிடையே அம்பலப்படுத்தவும் வீழ்த்தவும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்று நம்புவோம். தேசிய அளவில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு வாக்களிக்க வேண்டும் சுதர்சன் ரெட்டி அவர்களை குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும். பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்புகளை சார்ந்த எவரும் இதுவரை மொழி அடையாளத்தை உயர்த்திப் பிடித்தது இல்லை. தங்களை தமிழர்கள் என்று அவர்கள் ஒருபோதும் பேசியது இல்லை, பெருமைப்படுத்தி கொண்டதும் இல்லை. தேர்தலுக்காக இந்த முகமூடியை அணிந்து வருகிறார்கள் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அரசு அனுமதி மறுத்து இருப்பது வரவேற்கத்தக்கது. தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக மக்கள் ஆங்காங்கே கடந்த காலங்களில் போராட்டங்கள் நடந்தி இருப்பதை நாம் அறிவோம் மக்களின் உணர்வுகளை மதித்து தமிழ்நாடு அரசு அந்த திட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறியிருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் சங்கர் அவர்கள் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தங்கி உள்ள இல்லத்தை சுற்றிலும் ராணுவப்படைகள் சூழ்ந்து இருக்கிறார்கள். வெளி உலக தொடர்பே இல்லாத அளவிற்கு அவரை முடக்கி வைத்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு பாசிச நடவடிக்கை அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் இதனை கண்டிக்க முன்வர வேண்டும். எந்தக் கருத்தையும் ஜெக்தீப் தன்கர் சொல்ல முடியாத அளவுக்கு நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது கவலை இருக்கிறது. அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்திய கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும் என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விசிக சார்பாக கடிதம் எழுதி உள்ளோம். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விசிக சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Next Story