ஆர்எஸ்எஸ்ஸை பார்த்து விஜய் கற்றுக் கொள்ள வேண்டும்: எல்.முருகன்

மத்திய அமைச்சர் எல்.முருகன்
ஆர்எஸ்எஸ் கையில் அதிமுக என தவெக தலைவர் விஜயின் விமர்சனம் செய்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “அதிமுகவை ஆர்எஸ்எஸ் வழி நடத்துவதில் என்ன தவறு. ஆர்எஸ்எஸ் சமூக சேவைக்கான இயக்கம், அந்த இயக்கத்தின் கருத்துக்களை அதிமுக கேட்பது வரவேற்கத்தக்கது. ஆர்எஸ்எஸ்-ஐ பார்த்து தவெக தலைவர் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும். ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகால இயக்கம் என்பதால் அதிமுக கேட்கிறது. ஆர்.எஸ்.எஸ்-ஐ பார்த்து கற்றுக்கொண்டு பிறகு விஜய் விமர்சிக்கட்டும். முதலமைச்சர் மு க ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து கூறவில்லை? இண்டி கூட்டணி வெற்றி பெற்றபோது மட்டும் தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட்டதா..? காலை உணவுத் திட்டம் சரியாக , முறையாக குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஸ்டாம்ப் ஒட்டுவதுபோல் தேசிய கல்வி கொள்கையை காப்பி அடித்து மும்மொழி கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது” எனக் குற்றம்சாட்டினார்.
