உங்க மனுக்களை ஆற்றில் தூக்கி எறிந்துள்ளார்கள்! இவர்களா உங்களை காப்பாற்ற போகிறார்கள்?: ஈபிஎஸ்

உங்க மனுக்களை ஆற்றில் தூக்கி எறிந்துள்ளார்கள்! இவர்களா உங்களை காப்பாற்ற போகிறார்கள்?: ஈபிஎஸ்
X

eps

அதிமுக ஆட்சியில், விலைவாசி உயர்ந்தபோது எல்லாம், விலை கட்டுப்பாட்டு நிதி என 100 கோடி ஒதுக்கினோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஏழைகளை நேசித்த தலைவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவர் அம்மா. ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. ஏழைகளுக்கான ஆட்சியை வழங்கிய ஒரே அரசு, அதிமுக அரசு தான். இன்றைக்கு நாளேடுகளில் கொலை நிலவரத்தை பார்த்து வருகிறோம். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது. அரிசி கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது. ஆனால் மக்களுக்கான வேலைவாய்ப்பும், வருவாயும் குறைவாக உள்ளது. அதிமுக ஆட்சியில், விலைவாசி உயர்ந்தபோது எல்லாம், விலை கட்டுப்பாட்டு நிதி என 100 கோடி ஒதுக்கினோம். அதிமுக ஆட்சியில் ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விலையில்லா தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். அதேபோல தீபாவளியை முன்னிட்டு, அனைத்து மகளிருக்கும் தரமான பட்டுப் புடவைகள் வழங்கப்படும். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்காக மக்களிடம் வாங்கிய மனுக்களை, திருப்புவனம் வைகை ஆற்றில் தூக்கி எறிந்துள்ளார்கள். உங்கள் மனுக்களுக்கு திமுக அரசு கொடுக்கும் மதிப்பு இதுதான். இவர்களா மக்களை காப்பாற்றப் போகிறார்கள்? ஏழைகளை நேசித்த தலைவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவர் அம்மா. ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. ஏழைகளுக்கான ஆட்சியை வழங்கிய ஒரே அரசு, அதிமுக அரசு தான். இன்றைக்கு நாளேடுகளில் கொலை நிலவரத்தை பார்த்து வருகிறோம். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது. அரிசி கிலோவுக்கு ரூ.20 வரை உயர்ந்துள்ளது. ஆனால் மக்களுக்கான வேலைவாய்ப்பும், வருவாயும் குறைவாக உள்ளது. அதிமுக ஆட்சியில், விலைவாசி உயர்ந்தபோது எல்லாம், விலை கட்டுப்பாட்டு நிதி என 100 கோடி ஒதுக்கினோம் என்றார்.

Next Story