அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்!!

EPS and Sengottaiyan
திண்டுக்கல்லில் தங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, காமராஜ், விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, மாவட்ட அளவிலான கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். முன்னதாக, எடப்பாடி பழனிசாமி தங்கியுள்ள தனியார் ஹோட்டலில் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க வரும் அனைவரும் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டபிறகே, உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் உடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக்கு பின் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளா். அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
