அடுத்த செக்..! செங்கோட்டையன் ஆதரவாளர்களின் பதவியும் பறிப்பு!!

Edapadi palanisamy
செங்கோட்டையன் கட்சியின் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்களும் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் தம்பி (எ) கே ஏ சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஈஸ்வரமூர்த்தி (எ) சென்னை மணி , கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் தேவராஜ் , அத்தாணி பேரூராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும்ரமேஷ் , துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வேலு (எ) மருதமுத்து, ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் மோகன்குமார் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
