விஜய் ரோடு ஷோ செல்ல அனுமதியில்லை!!

விஜய் ரோடு ஷோ செல்ல அனுமதியில்லை!!
X

Vijay

திருச்சி மரக்கடையில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தொடங்க போலீஸ் அனுமதி அளித்துள்ளனர். காலையில் தவெக தரப்பில் மனு கொடுத்திருந்த நிலையில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் எனும் இயக்கத்தை தொடங்கி இருக்கிற நடிகர் விஜய், திருச்சியில் செப்டம்பர் 13-ம் தேதி முதல் தனது சுற்றுப்பயணத்தை தலைவர் விஜய் தொடங்க உள்ளார். டிவிஎஸ் டோல்கேட், தலைமை அஞ்சலகம் ரவுண்டானா, மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா, மரக்கடை ஆகிய வழியாக வந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே விஜய் உரையாற்றும் வகையில் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மரக்கடையில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தை தொடங்க போலீஸ் அனுமதி அளித்துள்ளனர். காலையில் தவெக தரப்பில் மனு கொடுத்திருந்த நிலையில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து விஜய் பிரச்சாரம் தொடங்க போலீஸ் அனுமதி மறுத்திருந்தது. விஜய்யின் பிரச்சாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ரோடு ஷோ செல்ல அனுமதியில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story