நான் தனிக்கட்சி ஆரம்பிக்கும்போது: அண்ணாமலை

annamalai
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ரஜினியை நான் அடிக்கடி சந்தித்து வருகிறேன், நட்பு அடிப்படையிலேயே அவரை சந்திக்கிறேன். அவரை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம். நான் தனிக்கட்சி ஆரம்பிப்பேனா என கேட்கிறீர்கள். ஆரம்பிக்கும்போது சொல்கிறேன். ரஜினி அவர்கள் என் குரு, தலைவர். அவரை அடிக்கடி பார்த்து ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விசயங்கள பேசுவது வழக்கம். டிடிவி தினகரனை சந்தித்து பேசியது உண்மைதான், NDA கூட்டணியில் இணையும்படி தினகரனிடம் கூறினேன். NDA கூட்டணியால்தான் திமுகவை வீழ்த்த முடியும். கூட்டணி குறித்து நவம்பரில் முடிவெடுப்பதாக டிடிவி தினகரன் கூறினார். சுற்றுப்பயணத்தை முடித்துவந்த பிறகு ஓ.பன்னீர்செல்வத்தை சந்திப்பேன். முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த தவெக தலைவர் விஜயின் கருத்தை வரவேற்கிறேன், தமிழ்நாட்டில் யாராவது குரல் கொடுக்க ஆரம்பித்தால் பாஜகவின் பி டீம் என கூறுகின்றனர் என்றார்.
