நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய் நாமக்கல், கரூரில் பிரச்சாரம்!!

நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய் நாமக்கல், கரூரில் பிரச்சாரம்!!
X

Vijay

நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய் நாமக்கல், கரூரில் பிரச்சாரம் செய்கிறார்.

நாளை மறுநாள் வடசென்னை, திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்வார் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக த.வெ.க. நிர்வாகிகள் சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதங்கள் அளிக்கப்பட்டது.ஆனால் அதனை மாற்றி சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 27ஆம் தேதி சேலம் மற்றும் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் விஜய்யின் பிரசார பயணத்தில் திடீர் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தி.மு.க. முப்பெரும் விழா நடந்து முடிந்த கரூரிலும், நாமக்கல்லிலும் 27-ந் தேதி அன்று விஜய் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். எனவே அவர், வடசென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் எப்போது பிரசாரம் செய்வார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. முதலில் காலை 11 மணியளவில் நாமக்கல் மாவட்டத்தில் விஜய் உரையாற்றுவார் எனவும் அதன்பிறகு கரூர் மாவட்டத்தில் மாலை 3 மணி அளவில் உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story