திமுகவிடம் காங்கிரஸ் சரண்டர்: தமிழிசை

திமுகவிடம் காங்கிரஸ் சரண்டர்: தமிழிசை
X

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

திமுகவிடம் காங்கிரஸ் சரண்டர் ஆகி விட்டதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம்,திருமுடிவாக்கத்தில் உள்ள ஜெயின் பப்ளிக் என்ற தனியார் பள்ளியில் நல்லாசிரியர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கப்பட்டு என பல்வேறு மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு பள்ளி ஆசிரியர்,தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட 55 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இதில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, “தமிழகம் முழுவதும் ஆசிரியப் பெருமக்களை அழைத்து விருது கொடுத்திருக்கிறார்கள். பள்ளிகளுக்கு வரும் போதெல்லாம் நினைப்பதுண்டு தேசிய கல்விக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்பதுதான் மாணவர்கள் மற்றொரு மொழியை கற்றுக் கொள்வது மிக, மிக அவசியமானது. இதனை தமிழகத்தில் ஏன் அரசியல் ஆக்குகிறார்கள் என்று தெரியவில்லை. ரேவந்த் ரெட்டியை வைத்து முதல்வர் கூட்டம் கூட்டுகிறார். கல்வியில் தமிழகம் தலைசிறந்து இருப்பதற்கு காரணம் அடிப்படையில் காமராஜர் என்று காங்கிரஸ்காரர்கள் சொல்வார்களா? காங்கிரஸ் திமுகவிடம் அப்படியே சரண்டர் ஆகி விட்டார்கள். தமிழகத்தில் கல்விக்கு அஸ்திவாரம் இட்டவர் காமராஜர். இதனை காங்கிரஸ்காரர்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது, கூட்டணியில் இருப்பதால் திமுகவிற்கு அனைத்து உரிமையும் கொடுத்து விடுவார்கள். காமராஜரை காங்கிரசிற்குள் அடைக்க முடியாது. காமராஜர் பொது தலைவர், கல்விக்கு கண் கொடுத்த தலைவர். காங்கிரஸில் இருப்பவர்களே கொண்டாட மறுக்கிறார்கள். திருநெல்வேலியில் பள்ளி மாணவன் பையில் இருந்து அறிவாளை எடுத்து இருக்கிறான், இது கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. வகுப்பு அறைகள் வன்முறை அறைகளாக மாறிவருகிறது. திமுக ஆட்சியில் இதை அரசு கண்காணிக்க வேண்டும். பள்ளியில் சிறந்த மாநிலம் ஒரு டான்ஸ், ஒரு பாட்டு என திரைப்படம் நிகழ்ச்சியை நடத்தாமல் தமிழ்நாட்டை கல்வியில் சிறந்த மாநிலமாக கொண்டு வர வேண்டும், அதற்கு புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்து கல்வியில் சிறந்த மாநிலம் என கொண்டாடுகிறீர்கள். தனியார் பள்ளியில் கிடைக்கும் அனைத்து வாய்புகளும் அரசு பள்ளியில் கிடைக்கிறதா? தனியார் 3 மொழியில் படிகின்றனர். அரசு பள்ளியில் அது கிடக்கிறதா?. NEP பயிற்சி தனியார் பள்ளியில் கிடைக்கிறது. அரசு பள்ளியில் கிடைப்பதை தடுக்கிறீர்கள். தமிழ்நாடு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கணக்கு போடும் திறன் குறைவாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது. கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்பதை கொண்டாடுவதை விட கல்வியில் எப்படி முன்னேற்றமடைய வேண்டும் என தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

Next Story