காவல்துறையின் முறையற்ற பாதுகாப்புக் குறைபாடுதான் காரணம்: ஈபிஎஸ்

காவல்துறையின் முறையற்ற பாதுகாப்புக் குறைபாடுதான் காரணம்: ஈபிஎஸ்
X

EPS

காவல்துறையின் முறையற்ற பாதுகாப்புக் குறைபாடுதான் காரணம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரூரில் கூட்ட நெரிசலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறியதுடன் அவர்களிக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அரசியல் தலைவர்கள் ஒரு நேரத்தை குறிப்பிட்டு விட்டு பலமணி நேரம் கழித்து வருவது ஏற்கத்தக்கது அல்ல. அறிவித்த நேரத்தில் கூட்டம் நடத்தாமல், பல மணி நேரம் தாமதமாக வந்து கூட்டம் நடத்துகிறார்கள். அரசியல் கட்சி தலைவரும் நிலைமையை கூர்ந்து கவனித்து ஆலோசித்து செயல்பட்டிருக்க வேண்டும். அரசியல் கட்சி கூட்டம் நடத்தினால், கட்சி, காவல்துறை, அரசை நம்பிதான் மக்கள் பங்கேற்கிறார்கள். காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும். முழுமையான பாதுகாப்பு வழங்கியிருந்தால் உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம். பொதுகூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மின் இணைப்பு துண்டிப்பால் கூட்ட நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அரசும், காவல்துறையும் முழுமையான பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். கரூரில் நடந்த பெருந்துயரத்திற்குக் காவல்துறையின் முறையற்ற பாதுகாப்புக் குறைபாடுதான் காரணம். எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் என்றால் முறையான பாதுகாப்பை காவல்துறை வழங்குவது இல்லை. அதுவே ஆளும்கட்சி என்றால் பாதுகாப்பு முறையாக வழங்கப்படுகிறது. காவல்துறை பாரபட்சம் இல்லாமல் செயல்பட வேண்டும். AIR SHOW-வில் முறையான பாதுகாப்பு வழங்காததாலே 5 பேர் இறந்தனர். இதில் பாடம் கற்காத ஸ்டாலினின் அலட்சியத்தால் மற்றொரு பெருந்துயரம் நடந்துள்ளது” என்றார்.

Next Story