திட்டமிட்ட சதி; நீதிபதியிடம் தவெக முறையீடு!!

திட்டமிட்ட சதி; நீதிபதியிடம் தவெக முறையீடு!!
X

vijay

கரூர் விஜய் பிரசாரத்தில் 39 பேர் உயிரிழந்தது திட்டமிட்ட சதி என உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தவெக முறையீடு செய்துள்ளது.

கரூரில் நேற்று இரவு நடந்த நடிகர் விஜய் கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கரூர் த.வெ.க. மாவட்ட செயலாளர் மதியழகன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் விஜய் பிரசாரத்தில் 39 பேர் உயிரிழந்தது திட்டமிட்ட சதி என உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தவெக முறையீடு செய்துள்ளது. கரூர் விஜய் பிரசாரத்தில் 39 பேர் உயிரிழந்தது எதேச்சையான விபத்து இல்லை என்றும், சிறப்பு அமர்வு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் தவெக கேட்டுக்கொண்டுள்ளது. கரூரில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட் நீதிபதி தண்டபாணியிடம் தவெக முறையிட்ட மனு மீதான விசாரணை நாளை மதியம் 2.15 மணிக்கு ஐகோர்ட் மதுரைக்கிளையில் நடைபெறவுள்ளது.

Next Story