விஜய்யின் அடுத்தக்கட்ட சுற்றுப்பயணம் ரத்து!!

X
vijay
கரூர் துயரம் காரணமாக விஜய்யின் அடுத்த வார பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
விஜய் முதற்கட்டமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் 3 மாவட்டங்களுக்கு பயணித்து மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முதற்கட்ட பிரச்சாரத்தின் போதே 3வது மாவட்டத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் 2வது கட்ட சுற்றுப்பயணம் முன்பாகவே, பிரச்சார அட்டவணை மாற்றப்பட்டது. இனி ஒவ்வொரு வாரமும் 2 மாவட்டங்களுக்கு பயணிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விஜய்யின் 4வது கட்ட சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதனால் விரைவில் தவெக தலைவர் விஜய் கரூர் விரைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப உயிரிழந்தவர்களுக்கு தவெக தரப்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Next Story
