விஜய் மீது திருமாவுக்கு வயிற்றெரிச்சல்: அண்ணாமலை

விஜய் மீது திருமாவுக்கு வயிற்றெரிச்சல்: அண்ணாமலை
X

Annamalai

திருமாவுக்கு வயிற்றெரிச்சல், கரூர் விவகாரத்தில் விஜய்யை குற்றவாளியாக்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் இருக்கும் நிறுவனம் மருந்தினை இந்தியா முழுவதும் அனுப்புகின்றனர். இந்த மருந்து கெட்டுப் போய்விட்டது என்று சொல்ல முடியாது. இது கெட்டுப் போனதைப் போல தெரியவில்லை, இதில் தேவையில்லாத பொருளை கலந்து இருப்பது போல தெரிகிறது, அதனால் இது விஷமாக மாறி இருக்கிறது. இதில் தர கட்டுப்பாடு தரம் என சொல்வதை விட தேவையில்லாத மருந்தை கலந்து இருக்கின்றனர். இது கவனக்குறைவா என தெரியவில்லை. தமிழக அரசும் இதை கையில் எடுத்திருக்கின்றனர். இதை பொறுத்தவரை குறிப்பிட்ட பேட்ச் மட்டும் பாதிப்பு இருக்கிறது. அந்த நிறுவனம் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதை பொறுத்திருந்து பார்க்கலாம். திருமாவளவன் பாராளுமன்ற உறுப்பினர். அவருடைய கட்சியில் கரூர் சம்பவம் போல நடந்திருந்தாலும் அது தவறுதான். திருமாவளவன் அவரது கட்சியில் இருந்து நிறைய பேர் வெளியேறுவதை பார்த்து வயிற்றெரிச்சலில் விஜய் மீது தாக்கி பேசுகிறார். மத்திய அரசை தாக்கி பேசுகிறார். டிடிவி தினகரன் சில கருத்துக்களை சொல்லி இருந்தார், என்னுடைய கருத்துக்கள் கூட உடன்பாடு இல்லை என்று சொன்னார், டிடிவி தினகரன் மீது பெரிய மரியாதை இருக்கிறது. நயினார் நாகேந்திரன் யாருக்கும் எதிராக எப்பொழுதும் பேசவில்லை. எங்களுக்கு முக்கிய எதிரி திமுக.அதை எதிர்த்து மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார். அரசியலில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருக்கிறது, அதை சரி செய்து கொண்டு செல்வோம்” என தெரிவித்தார்.

Next Story