பிரச்சாரத்தை தள்ளிவைக்கும் ஈபிஎஸ்!!

பிரச்சாரத்தை தள்ளிவைக்கும் ஈபிஎஸ்!!
X

edapadi

பருவ மழைக்காலத்திற்கு பின் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இபிஎஸ் பிரச்சாரம் செய்ய உள்ளதாக ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பருவ மழை தொடங்க உள்ள நிலையில், மழை காலத்துக்கு பின்னர் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வது என ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் பருவ மழை காலங்களில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் மாவட்ட செயலாளர்கள் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்ய வேண்டும், மாவட்ட செயலாளர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

Next Story