விஜய் கரூர் சென்றிருந்தால் லத்தி சார்ஜ் நடந்திருக்கும்: நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran
பாஜக மாநில மையக்குழு கூட்டம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கமலாலயத்தில் நடைபெற்றது. இதில் பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, இணை பொறுப்பாளர் முரளிதர், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் பாஜக மாநில தலைவர்கள் அண்ணாமலை, , தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின். வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக எவ்வாறு செயல்பட வேண்டும். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரும் 12ஆம் தேதி முதல் மேற்கொள்ளும் சுற்றுப்பயணம் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.மேலும், பாஜக தமிழகத்தில் திமுக எதிர்ப்பு நிலையை வலுப்படுத்தும் விதமாகவும், திமுக கடந்த தேர்தல் வாக்குறுதிகள் செயல்படாமல் இருப்பது குறித்தும் அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்," எனது சுற்று பயணம் 12 ஆம் தேதி, தொடங்கப்பட உள்ளது, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைக்கிறார் அதை தொடர்ந்து அன்று பொதுக்கூட்டமும் நடைபெற இருக்கிறது என்று தெரிவித்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது தான் தமிழகத்தில் முதலமைச்சராக கருணாநிதி இருந்த பொழுது யார் கட்சத் தீவை கொடுக்கப்பட்டது என்றும், ஆனால் துரைமுருகன் செல்கிறார், கச்சத்தீவை இந்திய அரசு கொடுத்த போது அந்த விபரம் கருணாநிதிக்கு அப்போது தெரியாது என்று சொல்கிறார் முதலமைச்சராக இருக்கும் போது ஒரு நாட்டுடைய சொத்து மற்றொரு நாட்டுக்கு கொடுக்கும் பொழுது எப்படி தெரியாமல் போகும் ? என் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினர். இப்போது கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று கேட்கும் முதலமைச்சர் கேட்பது எந்த விதத்தில் நியாயம் ? பாஜக சார்பில் பிரதமரை சந்தித்து கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளில் தாங்கள் இறங்கி இருப்பதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். கரூர் சம்பவத்திற்கு முதல்வர் பிராயசித்தம் தேட வேண்டும், அதை திசை திருப்ப பட்சத்தில் முதல்வர் கச்சதீவை பற்றி பேசுகிறார். 27 ஆம் தேதி நடந்த சம்பவத்திற்கு கமலஹாசன் இப்பொழுது போய் முதலமைச்சர் என்ன சொன்னாரோ அதேபோய் அங்கு சென்று சொல்லி இருக்கிறார். விஜய் இத்தனை நாள், கரூர் செல்லாமல் இருக்கிறார் ? விஜய் ஒருவேளை கரூர் சென்று இருந்தால் அங்கு லட்டி சார்ஜ் வருவதற்கான வாய்ப்பு உள்ளது.கச்சதீவு விவகாரத்தில் முதலமைச்சர் அரசியல் செய்ய வேண்டாம் என்று நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.
