அதிமுக நிகழ்ச்சிகளில் தவெக கொடியுடன் பங்கேற்க கூடாது: தவெக அறிவிப்பு

X
tvk
அதிமுக நிகழ்ச்சிகளில் தவெக கொடியுடன் பங்கேற்க கூடாது என தவெக நிர்வாகி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் பரப்புரையில் த.வெ.க கொடியுடன் அக் கட்சியின் தொண்டர்கள் பங்கேற்று வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கூட்டணிக்காக பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி மும் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆகிவிட்டது என பேசி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் அஇஅதிமுக நிகழ்ச்சிகளில் த.வெ.க கொடியுடன் பங்கேற்க கூடாது என த.வெ.க நிர்வாகி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். த.வெ.க நாமக்கல் மேற்கு மாவட்ட துணை செயலாளர் மோகன் என்பவர் தனது சமூக வலைதளத்தில், மாற்றுக் கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கட்சியின் தலைவர் மற்றும் பொது செயலாளர் அனுமதி இன்றி த.வெ.க கொடியுடன் தொண்டர்கள் பங்கேற்க கூடாது எனக் கூறியுள்ளார்.
Next Story
