பாமகவின் புதிய செயல் தலைவர் அறிவிப்பு!!

Ramadoss
ராமதாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்டில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுக் கூட்டத்தில், கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, இதுகுறித்து அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அன்புமணி பதிலளிக்காததால் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். அவரை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில் கட்சியின் புதிய செயல் தலைவராக தனது மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். தர்மபுரியில் இன்று (அக்., 25) நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், எனது மகள் ஸ்ரீகாந்தி கட்சிக்கும், எனக்கும் பாதுகாப்பாக இருப்பார். செயல் தலைவர் என்ற பொறுப்பை உருவாக்கினேன். அதனை ஒருவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எனவே எனது பெரிய மகளுக்கு அந்த பதவியை வழங்குகிறேன் என தெரிவித்தார. ராமதாஸ், அன்புமணி மோதல் முற்றியுள்ள சூழலில் மகளுக்கு தற்போது பொறுப்பு வழங்கியுள்ளார்.
