இன்று கோவையில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!

vijay
கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் சுமார் 11 மணியளவில் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டமற்ற அப்பகுதிக்கு அப்போது வந்த 3 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த ஆண் நண்பர் மயங்கியுள்ளார். பின்னர், கல்லூரி மாணவியை அப்பகுதியில் உள்ள மறைவான இடத்திற்கு தூக்கிச்சென்ற அந்த கும்பல் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. இதையடுத்து, தாக்குதலில் மயக்கமடைந்த ஆண் நண்பர் மயக்கம் தெரிந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் தீவிர தேடுதலுக்குப்பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் கல்லூரி மாணவியை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், கல்லூரி மாணவி வன்கொடுமையை கண்டித்து இன்று(நவ.04) கோவையில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் அருகே இன்று பகல் 12 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
