உதயநிதி ஸ்டாலினை முதல்வர் ஆக்க முயற்சி செய்து வருகின்றனர்: நயினார் நாகேந்திரன்

உதயநிதி ஸ்டாலினை முதல்வர் ஆக்க முயற்சி செய்து வருகின்றனர்: நயினார் நாகேந்திரன்
X
எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க நாங்கள் இன்று சபதம் ஏற்றிருக்கின்றோம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் பூங்கா சாலையில் பா.ஜ.க சார்பில் பரப்புரை பொது கூட்டம் இன்று (4-11-2025) மாலை நடைபெற்றது. இதில் உரையாற்றிய பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “நாமக்கல் கோழி முட்டை அதிகமாக உற்பத்தி செய்யும் மாவட்டம். கோழிப் பண்ணை தொழிலுக்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை. கொல்லிமலை பகுதியில் மூலிகை அதிகம் உள்ளது. தற்போது கொல்லிமலை மோசமாக உள்ளது. கிட்னி திருடி செல்கின்றனர் திமுகவினர். மக்கள் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. குடும்பத்தின் ஆட்சி நடைபெறுகின்றது. சார் என்றாலே திமுகவிற்கு பயம் வந்துவிட்டது. எதற்கு பயம்? எங்கு பார்த்தாலும் கஞ்சா... பள்ளி, கல்லூரி வாசலில் விற்கபடுகிறது. கரூரில்ல் 41 பேர் இறந்து போனார்கள். இது போல் கொடுர சம்பவம் எங்காவது நடந்து உள்ளதா? டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்குகிறார்கள். தமிழகத்திலேயே கோவை பாதுகாப்பான இடம். அங்கேயே பெண் பலாத்காரம் நடந்து உள்ளது. காவல் துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் தானே பாதுகாக்க வேண்டும். மோசமான சூழ்நிலையில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு நிறைய திட்டங்களை பிரதமர் மோடி தந்து உள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. உதயநிதி ஸ்டாலினை முதல்வர் ஆக்க முயற்சி செய்து வருகின்றனர். அதற்காக கூட்டணி கட்சிகளை இழுத்து பிடித்து வைத்துள்ளனர். பா.ஜ.க உலகத்திலேயே மிக பெரிய கட்சி. ஆனால் திமுக எங்களை ஏளனமாக பார்க்கிறீர்கள். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் ஆக்க நாங்கள் இன்று சபதம் ஏற்றிருக்கின்றோம்” என்றார்.

Next Story