தேர்தலில் ரேஸில் முந்திச் செல்லும் திமுக... மேற்கு மண்டலத்தில் திமுக மகளிரணியின் பிரம்மாண்ட மாநாடு!!

தேர்தலில் ரேஸில் முந்திச் செல்லும் திமுக... மேற்கு மண்டலத்தில் திமுக மகளிரணியின் பிரம்மாண்ட மாநாடு!!
X
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுக மகளிரணியின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கிவிட்டது, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள்,விருப்ப மனு விநியோகம், தேர்தல் அறிக்கைக்கான குழுக்கள், மாநாடுகள் என தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக மற்றக் கட்சிகள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளும் வகையில் தேர்தல் பணிகளை மேற்கொண்டுவருகிறது. ஏற்கனவே வாக்குச்சாவடி தோறும் கட்சியை வலுப்படுத்த ஓரணியில் தமிழ்நாடு, என்வாக்குச் சாவடி- வெற்றி வாக்குச் சாவடி’ போன்ற முன்னெடுப்புகளை எடுத்தது. தற்போது மண்டல வாரியாக மாநாடுகளை நடத்தி தனது பலத்தை நிருபித்து வருகிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வடக்கும் மண்டலத்தை சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் 2 இலட்சம் பேர் பங்கேற்ற பிரம்மாண்ட மாநாட்டை திருவண்ணாமலையில் நடத்திக் காட்டியது, ஒரு மண்டலத்தில் மட்டும் இளைஞரணிக்கே இவ்வளவு நிர்வாகிகளா? என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது, அந்த ஆச்சரியம் மறைவதற்குள் மகளிரணி சார்பில் மேற்கு மண்டலத்தில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ மாநாட்டை டிசம்பர் 29 ஆம் தேதி நடத்த இருக்கிறது திமுக. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கு கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்குகிறார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரை ஆற்ற உள்ளார். இந்த மாநாட்டில் 1.5 இலட்சம் முதல் 2 இலட்சம் வரை பெண்கள் பங்கேற்பார்கள் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக ஆட்சியில் பெண்கள் நலத்திட்டங்களை மையப்படுத்தியே பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 1.31 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கும் கலைஞர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், விடியல் பேருந்து பயணம், தோழி விடுதிகள் உள்ளிட்ட திட்டங்களால் கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு இந்தியாவிலேயே 43 சதவீத பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலமாக உயர்ந்துள்ளது. இந்தச் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் மகளிரணி மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு சவாலாக இருந்தது மேற்கு மண்டலம், ஆனால் அதை மாற்றி அமைக்கும் வகையில் மேற்கு மண்டலத்திற்கு சிறப்புக் கவனம் செலுத்திய திமுக, உள்ளாட்சித் தேர்தல்களிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது,. திமுகவை எதிர்கொள்ள மேற்கு மண்டலம் தங்களுக்கு கைக்கொடுக்கும் எனும் அதிமுகவின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இந்த மகளிரணி மாநாட்டை நடத்த இருக்கிறது திமுக. கட்சியின் மகளிரணியின் சார்பில் அதுவும் ஒரே ஒரு மண்டலத்தில் மட்டும் 1.5 இலட்சம் பெண்களை திமுக திரட்ட உள்ளதன் மூலம் திமுக அசைக்கமுடியாத அளவிற்கு பலம் வாய்ந்தக் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதிமுகவில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை போதுமான அளவில் யாரும் பெறாததால் கால நீட்டிப்பு செய்துள்ளது, ஆனால் மாநில மாநாடுகளைப் போல் மண்டல மாநாடுகளை நடத்தி தேர்தல் ரேஸில் முந்தி நிற்கிறது.
Next Story