மாட்டுப் பொங்கலையொட்டி, மக்களுக்கு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து!!

X
மாட்டுப் பொங்கலையொட்டி, மக்களுக்கு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாட்டுப் பொங்கலையொட்டி, மக்களுக்கு முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “விவசாயிகளின் துணையாகவும், உழவின் அடையாளமாகவும் இருக்கும் மாடுகளை போற்றும் மாட்டுப்பொங்கல் திருநாளில், தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாட்டுப்பொங்கல் நன்னாளில், இயற்கையுடன் இணைந்த நமது வேளாண்மை கலாச்சாரத்தைக் காக்கும் விவசாயிகளும், அவர்களுடன் துணை நிற்கும் கால்நடைகளும் என்றும் செழிக்கவும், அனைவருக்கும் வளமும் நலமும் பெருகவும் வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Next Story
