கரூரில் விஜய் பிரசாரத்திற்கு 11 நிபந்தனைகளை விதித்த காவல்துறை!!

vijay
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சனிக்கிழமை நாட்களில் " மக்கள் சந்திப்பு பயணம்" என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நாளை 27 ஆம் தேதி கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் செய்கிறார். நாளை காலை நாமக்கலில் பிரச்சாரம் செய்யும் விஜய், மதியம் கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் தனது மக்கள் சந்திப்பு பயணம் மூலம் பிரச்சாரம் செய்கிறார். அந்த இடத்தில் பிரச்சாரம் செய்வதற்கு மாவட்ட காவல்துறை அனுமதி அளித்ததை அடுத்து, கட்சி நிர்வாகிகளுடன் அப்பகுதிக்கு வந்த தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அப்பகுதியை ஆய்வு செய்தார். தொடர்ந்து விஜய் பிரச்சாரம் செய்யும் இடம் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கரூரில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை 11 நிபந்தனைகளை விதித்தித்துள்ளது. அதன்படி, விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை, பொதுக்கூட்டம் முடிந்த பின்பு கொடிகள் பதாகைகளை உடனே அகற்ற வேண்டும், அனுமதி இல்லாமல் LED திரை, மேடை அமைக்க கூடாது, அனுமதி பெறாமல் பதாகைகள் வைத்தால் சட்ட நடவடிக்கை பாயும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
