விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்: ஈபிஎஸ்

EPS
வேலூர் மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “அதிமுக ஆட்சியில் வேளாண் கடனை 2 முறை தள்ளுபடி செய்தோம்.பேரிடர் பாதித்த பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகை கொடுத்தோம். உழவர் பாதுகாப்பு திட்டங்களில் பல்வேறு உதவி வழங்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்தினோம். கொரோனா காலத்திலும் விலைவாசி உயர்வில்லாமல், கண்களை இமை காப்பது போல ஏழை மக்களை காப்பாற்றியது அதிமுக அரசாங்கம். 2026ல் அதிமுக ஆட்சி அமைந்த பின் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். தமிழக மக்களை வளமோடும், நலமோடும் வாழ வைக்க உழைப்பதே அதிமுகவின் நோக்கம். 2021 தேர்தலில் 525 வாக்குறுதிகளை திமுக அறிவித்தது, அதில் 98% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். உண்மையில் 10% வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. இன்னைக்கு 1 பவுன் ரூ 75,000. தாலிக்கு தங்கம் என்ற இப்படிப்பட்ட திட்டத்தை நிறுத்தியது திமுக. பயிர்க்கடன் தள்ளுபடியில் இந்தியாவிலேயே வரலாறு படைத்தது அதிமுக. சிறுமி முதல் முதியோர் வரை பெண்களுக்கு பாதுகாப்பில்லை; சட்டம்-ஒழுங்கு சந்திச் சிரிக்கிறது. திருவள்ளூரில் கடந்த 20 நாட்களில் 11 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. கஞ்சா போதைப்பொருள் தொடர்பாக பள்ளி, கல்லூரிகளைச் சுற்றி 2348 பேர் பிடிபட்டதாக தன்னுடைய கொள்கை விளக்க குறிப்பில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கைது செய்யப்பட்டது 148 பேர். முத்தரசனுக்கு அதிமுகவை பற்றி பேச எந்தத்தகுதியும் இல்லை, கம்யூனிஸ்ட்டை காட்டிக்கொடுத்ததே திமுகதான் எனக் குற்றம்சாட்டினார்.
