கரூர் சோகம் : 34 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்: கரூர் விரைகிறார் முதல்வர்!!

கரூர் சோகம் : 34 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்: கரூர் விரைகிறார் முதல்வர்!!
X

Modi

கரூர் துயர சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கரூர் துயர சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு வலிமை கிடைக்கவும், காயம் அடைந்தவர்கள் குணம் அடையவும் பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது; கரூர் அரசு மருத்துவமனைக்கு பலரது உடல்கள் இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டுள்ளன. இவர்கள் பிரசாரக் கூட்டத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் உள்ளவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. 45க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சம்பவ இடத்தில் இருந்து இன்னும் சடலங்கள் வரலாம் என்றும் அச்சத்தில் உள்ளோம், இவ்வாறு கூறினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் இன்று இரவே கரூர் செல்ல இருக்கிறார்.

Next Story