விஜய் பிரசாரத்தில் 39 பேர் பலி; ஈபிஎஸ் பரப்புரை ரத்து!!

EPS
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கழகப் பொதுச் செயலாளர் ‘புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் 5.10.2025 வரை தொடர் பிரச்சாரம் செய்திடும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்த, புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயண ஐந்தாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 29.9.2025, 30.9.2025 மற்றும் 4.10.2025 ஆகிய தேதிகளில் தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, முறையே 2.10.2025, 3.10.2025 மற்றும் 6.10.2025 ஆகிய தேதிகளில் கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஏற்கெனவே 5.10.2025 - ஞாயிற்றுக் கிழமை அன்று, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் நடைபெறுவதாக அறிவித்திருந்த பிரச்சாரக் கூட்டம், அதே தேதியில் (5.10.2025 - ஞாயிற்றுக் கிழமை) நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
