திமுக-வின் முதல் பொருளாளர் ஐயா கே.கே. நீலமேகம்... நினைவைப்போற்றிய திமுக.. நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்!!

X
திமுக-வின் முதல் பொருளாளர் ஐயா கே.கே. நீலமேகத்தின் புகைப்படத்தை காட்சிப்படுத்தி அவரது நினைவைப் போற்றும் வகையில் ஏற்பாடு செய்த திமுக தலைமை கழகத்திற்கு கட்சியின் கடலூர் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் கே.ஜி.எஸ்டி.சரத் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் 75 வது அறிவுத்திருவிழா நடைபெற்றது. இந்த அறிவுத்திருவிழா நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து பேருரை ஆற்றினார். இதனிடையே இந்த அரங்கில் கடலூர் மாநகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கே.ஜி.எஸ்டி.சரத்தின் தாத்தாவும் திமுக-வின் முதல் பொருளாளருமான ஐயா கே.கே. நீலமேகத்தின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. திராவிட இயக்க தீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் இதனை ஏற்பாடு செய்த தலைமை கழகத்திற்கும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருக்கும் கே.ஜி.எஸ்டி.சரத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Next Story
