மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி: கே.எஸ்.ராஜ் கவுண்டர்

புதிய திராவிட கழகம் நிறுவன தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய திராவிட கழகத்தின் வெல்லட்டும் சமூக நீதி - ஆறாவது மாநில மாநாடு ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எழுமாத்தூரில் கடந்த 30.11.2025 அன்று நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாசியுடன், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். அமைச்சர் சு.முத்துசாமி, மேற்கு மண்டல பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார், ஏ.ஜி.வெங்கடாசலம், தோப்பு என்.டி.வெங்கடாசலம், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சி மாநில மாவட்ட நிர்வாகிகள், 30 குக்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், புதிய திராவிட கழக மாநில மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், கொங்கு சொந்தங்கள் என மாநாட்டை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
