முதலமைச்சரை Uncle -னு சொல்றார்... விஜய்யை Boomer-னு சொன்னா?: அண்ணாமலை

annamalai
தவெக தலைவர் விஜயின் மதுரை மாநாடு குறித்து பேட்டியளித்த தமிழ்நாடு பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, “முதலமைச்சரை Uncle என மேடையில் விஜய் சொல்லலாமா? திமுக-வினர் விஜயை Boomer என்று சொன்னால் அவர் மனது புண்படும்தானே? தாய்மாமன் என்ற வார்த்தையெல்லாம் யோசித்து பயன்படுத்த வேண்டும். எல்லாருக்கும் விஜய் தாய்மாமன் என்றால் 50 ஆண்டுகளாக எங்கே சென்றார்?எத்தனை மருமக்களுக்கு சீர் கொடுத்தார்? தாய்மாமா தான் நடித்த படங்களுக்கு இலவசமாக டிக்கெட் கொடுக்கிறாரா? விஜய்யை எதிர்க்க அண்ணாமலையால் மட்டுமே முடியும். எடப்பாடியால் 1% கூட முடியாது. ஆனால் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு தான் அண்ணாமலை மாநில அளவிலான பிரச்சாரத்தை ஆரம்பிக்க வேண்டும். அது தான் கட்சிக்கும் அவருக்கும் கூட்டணிக்கும் நன்மை பயக்கும். கூட்டமாக கூடுவோரை வாக்குகளாக மாற்ற சித்தாந்தம் வேண்டும். மற்றவரின் பலவீனம் குறித்து பேசிய விஜய் தனது பலம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. பழங்கதைகளை பேசாமல் 21 ஆம் நூற்றாண்டு அரசியலுக்கு விஜய் வரவேண்டும். பழைய பஞ்சாங்கத்தையே விஜய் பேசுகிறார். விஜய்யும் நாங்களும் சித்தாந்ததில் நேர் எதிராக உள்ளோம் என்றார்.
