3 தடவை கரண்ட் கட் பண்ணிருக்காங்க.. இதில ஏதோ சதி நடந்திருக்கிறது: நயினார் நாகேந்திரன்

3 தடவை கரண்ட் கட் பண்ணிருக்காங்க.. இதில ஏதோ சதி நடந்திருக்கிறது: நயினார் நாகேந்திரன்
X

Nainar Nagendran

3 தடவை கரண்ட் கட் பண்ணிருக்காங்க.. இதில ஏதோ சதி நடந்திருக்கிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கரூரில் தவெக பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் ஆறுதல் கூறினார். பின்னர் கரூர் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “கரூர் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி அரசு வழங்க வேண்டும். த.வெ.க கூட்டத்திற்கு தமிழக காவல்துறை சரியான பாதுகாப்பு கொடுக்கல.. இது சாதாரண விஷயம் இல்ல.. இதில் ஏதோ சதி நடந்திருக்கிறது. 3 தடவை கரண்ட் கட் பண்ணிருக்காங்க. தலைவர் என்றால் மக்களை சந்தித்து ஆறுதல் சொல்ல தெரிய வேண்டும். காவல்துறையினரின் கவனக்குறைவால் நடந்த இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு பொறுப்பேற்க வேண்டும். காவல்துறையினர், தங்களது கடமையை செய்யாததால், 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற விசாரணை வேண்டும். நேரில் வந்து ஆறுதல் சொல்லாமல் எப்படி தலைவராக இருக்க முடியும்?.20 லட்சம் கொடுத்து உயிரை வாங்க முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

Next Story