கொளுத்தும் வெயிலில் 90 வயது மூதாட்டி நடந்து வந்து வாக்களிப்பு
ஊன்று கோலுடன் வாக்களிக்க வந்த மூதாட்டி
பாபநாசம் அருகே கொளுத்தும் வெயிலில் 90 வயது மூதாட்டி ஊன்றுகோளுடன் நடந்து வந்து வாக்களித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நீண்ட கீயூ வரிசையில் நின்று ஆண், பெண் இருபாலரும் வாக்களித்தனர் ராஜகிரி ஊராட்சியில் காமராஜர் தெருவை சேர்ந்த 90 வயது மூதாட்டி மாரியம்மாள் கொளுத்தும் வெய்யிலில் ஊன்றுகோளுடன் பள்ளிக்கு நடந்து வந்து வரிசையில் நின்று வாக்களித்து சென்றார்.
அதேபோல் ராஜகிரி கஞ்சா நகரை சேர்ந்த மெனால் என்ற முதல் பட்டதாரி பெண் ஆர்வமுடன் வந்து தன் முதல் வாக்கினை பதிவு செய்து மகிழ்ச்சியுடன் சென்றார்
Next Story