கலைஞருக்கு வள்ளியூரில் முழு உருவ வெண்கலச் சிலை.!

கலைஞருக்கு வள்ளியூரில் முழு உருவ வெண்கலச் சிலை.!

சபாநாயகர் அப்பாவு

கலைஞருக்கு வள்ளியூரில் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட உள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு ஜெயந்தியை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சபாநாயகர் அப்பாவு தமிழக அரசு நிதியில் கட்டப்பட்டு வரும் ரூ.12.5 கோடி மதிப்பீட்டிலான புதிய பஸ் நிலையம் மற்றும் ரூ.4.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் தினசரி சந்தை கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.மேலும் விரைவில் பணிகளை முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொண்டார். பின்னர் நிருபர்களிடம் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:- ரூ.4.5 கோடியில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஜனவரி மாதத்திற்கு பின்னர் தினசரி சந்தை திறக்கப்படும். இதில் வாகனங்கள் முன்பு செல்வதற்கான வளைவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.மேலும் வள்ளியூர் பேரூராட்சி தீர்மானத்தின் படி சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அரசின் ஒப்புதல் பெறப்பட உள்ளது. விரைவில் தினசரி சந்தை முன்பு கலைஞர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும். அதனை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓராண்டுக்குள் பஸ் நிலைய கட்டுமான பணிகளும் நிறைவடையும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story