முதலமைச்சரின் உணவுத்திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

முதலமைச்சரின் உணவுத்திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சரின் உணவுத்திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் உணவுத்திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பழனி தலைமை தாங்கினார், அப்போது அவர் கூறியதாவது:- பள்ளி சமையலறை கூடங்களுக்கு தேவையான அளவு குடிநீர் வசதி மற்றும் மின் வசதி மற்றும் உணவுப்பொருட்களை பாதுகாப்பாக வைக்க இடவசதி உள்ளதை உறுதி செய்தல் வேண்டும். புதிய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உணவுப்பொருட்களின் தரம், சுத்தம் மற்றும் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்தல், மாதாந்திர ஆய்வறிக்கையை பிரதி மாதம் தேதிக்குள் அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் காய்கறி தோட்டம் அமைந்து அதிலுள்ள காய்கறிகள், கீரை வகைகளை பயன்படுத்த வேண்டும் காலை உணவு சமைத்தல், பரிமாறுதல் போன்ற நிகழ்வினை குறித்த நேரத்தில் காலை உணவு அமைக்கும் பணியாளர்கள் சி.எம்.பி.எப்.எல். (CMBFS) என்ற செயலியில் பதிவேற்றம் செய்வதை கன்காணிக்க வேண்டும். தரமான உணவுப்பொருட்கள் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் உரிய அலுவவர்களுக்கு தெரிவித்து உடனே மாற்றம் செய்துதரவேண்டும் பள்ளி அளவில் கண்கானிப்புக்குழ கூட்டம் வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் நடத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும் என கூறினார், இந்த ஆய்வு கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (ஊரகவளர்ச்சி முகமை) ஸ்ருதன் ஜெய் நாராயணன், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா,கலெக்டரின் நேர் முக உதவியாளர் (வளர்ச்சி) சரவணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளார் யசோதாதேவி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டஅலுவலர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story