கனிமொழிக்கு வாழ்த்து கூறிய நடிகர் விஜய்! அரசியலா! அரசியல் நாகரீகமா!

கனிமொழிக்கு வாழ்த்து கூறிய நடிகர் விஜய்!  அரசியலா! அரசியல் நாகரீகமா!

கனிமொழி - விஜய்

அடுத்தடுத்து அடியெடுத்து வைக்கும் விஜயின் அரசியல் நகர்வு!

நடிகர் விஜய் திமுக எம்பி கனிமொழியை நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவின் துணைப் பொது செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்பியுமான கனிமொழி தனது 56வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தனது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். கனிமொழி எம் பி யின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கட்சி தொண்டர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நடிகர் விஜய் தொலைபேசி வாயிலாக நேரடியாக தொடர்பு கொண்டு கனிமொழி எம்பி யிடம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது ஐந்து நிமிட உரையாடலில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை தூத்துக்குடி மக்களுக்கு உதவி செய்ததை குறிப்பிட்டு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் கனிமொழி எம். பி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு விஜய் நிவாரண உதவி வழங்கியதை சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கனிமொழி எம்பி வெளியிட்ட அறிக்கையில் எனது பிறந்தநாள் அன்று நண்பர்கள் மற்றும் கழகத்தினர் என்னை சந்திக்க வருவதையும் பூங்கொத்து உள்ளிட்ட வாழ்த்துப் பொருள்கள் அனுப்புவதையும் தவிர்த்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.

நடிகர் விஜய் தற்போது அரசியல் நாகரிகத்தோடு அரசியல் தலைவர்களை அணுக ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் டிடிவி தினகரன் நல்லதம்பி தற்போது கனிமொழி என அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். இது அவருடைய அரசியல் போக்கை அறவே எடுத்துக்காட்டுகிறது. மேலும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து விடுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story