கடன் வாங்கி ஊழல், சாதி அரசியல் பேசி வென்ற போலி கபடதாரிகள்: தி.மு.க.-வை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா

கடன் வாங்கி ஊழல், சாதி அரசியல் பேசி வென்ற போலி கபடதாரிகள்: தி.மு.க.-வை விமர்சித்த ஆதவ் அர்ஜுனா
X

aadhav arjuna

கடன் வாங்கி ஊழல், சாதி அரசியல் பேசி வென்ற போலி கபடதாரிகள் என தி.மு.க.-வை தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, பிறப்பால் ஒரு தலைவர் உருவாகக்கூடாது, மன்னராட்சி ஒழிக்கப்படவேண்டும் என்கிற ஒரு உண்மையை கூறியதற்காக பல்வேறு சூழ்ச்சிகள் என்னை சூழ்ந்த போது என்னை அழைத்தவர் விஜய். சினிமாவின் உச்சத்தில் இருந்த போது அதனை துறந்து அரசியலுக்கு வந்தவர் விஜய். சாதி அரசியலை பேசி தேர்தல் அரசியலில் வெற்றி பெற்று ஊழலை முதற்கண்ணாக கொண்டுள்ளனர். பெரியாரை முன்னிலைப்படுத்தி இன்றைய அரசியல் ஊழல்வாதிகளின் கையில் உள்ளது. 100 வருடங்கள் ஆகியும் பெரியார் கண்ட கனவு எதுவும் நிறைவேற்றப்படவில்லை. 75 வருடங்களாக கொள்கை பேசிய தலைவர்கள் என்ன மாற்றம் செய்தார்கள்? தமிழகத்தின் கடன் 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஊழல்வாதிகளின் கைகளில் தமிழக அரசியல் இருப்பதை துடைத்தெறிய வேண்டும். 15 வருடங்களாக 5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ள கட்சி அதிமுக. வெளிநாட்டில் பொருளாதாரத்தை உருவாக்கி கடன் வாங்குவர், தமிழகத்தின் கடனை உருவாக்கி ஊழல் செய்கின்றனர். சாதி அரசியல் பேசி தேர்தலில் வென்ற போலி கபடதாரிகள். தமிழக அரசியலுக்கு ஒரே மாற்று த.வெ.க., ஒரே மாற்று தலைவர் விஜய். தளபதி என்ற நிலையில் இருந்து தலைவர் என்று பரிமாணத்தை நோக்கி நகர்ந்து வருகிறார் விஜய். ஆளுங்கட்சிக்கு தூக்கத்திலும் இந்த கூட்டத்தை எப்படி அடக்குவது? என்பது பற்றிய எண்ணம் தான் உள்ளது. சினிமா துறையில் பல தொழில்களை நடத்தி கொண்டிருக்கும் அரசாக இன்றைய அரசியல் உள்ளது. சிறை செல்வதற்கும் த.வெ.க.வினர் தயாராக உள்ளனர். ரூ.1000 கொடுத்து ரூ.10ஆயிரத்தை பிடுங்கி கொண்டிருக்கிறார்கள். எங்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம், நல்ல தலைவர்கள்கள் இருக்கிறார்கள். விஜயை பார்த்து நடிகர் என்று கூறுகின்றனர், ஆனால் என் தலைவரை பார்த்து நீங்கள் தான் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நம் கொள்கைகளை உள்வாக்கி மேலும் பல தலைவர்கள் வர தயாராக உள்ளனர். பல பூகம்பங்கள் தயாராக உள்ளது என்றார்.

Tags

Next Story