சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்
X
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல்

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேர்காணலை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து, கேள்விகளை கேட்டார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பணிகளை அனைத்துக்கட்சிகளும் வேகப்படுத்தி வருகின்றன. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், அதிமுக சார்பில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரியில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கலாம் என எடப்பாடி பழனிசாமி 2 வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். அதன்படி, அதிமுக சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனுக்களை வழங்கியிருந்தனர். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்ளிட்ட சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்காக 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களுடைய தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து மட்டும் 2,187 விருப்ப மனுக்கள் அளித்திருந்தனர்.

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளவர்களுக்கான நேர்காணல் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலத்தில் 9ம் தேதி (நேற்று) முதல் 13ம் தேதி வரை காலை, மாலை என தனித்தனியாக நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி முதல் நாளான நேற்று காலை 9.30 மணிக்கு சேலம் மாநகர், அதைத்தொடர்ந்து சேலம் புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணல் நடந்தது.

Next Story