வீண் விளம்பரம் தேடும் அதிமுக - முதல்வர் மு.க ஸ்டாலின் சாடல்

வீண் விளம்பரம் தேடும் அதிமுக - முதல்வர் மு.க ஸ்டாலின் சாடல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்)

பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அ.தி.மு.க. மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது என முதலமைச்சர் மு. க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிக் கட்சியினர் குறிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எழுப்ப விரும்பும் கேள்விகள் தொடர்பாக பதிலளிக்க இந்த அரசு தயாராக உள்ளது.

சட்டமன்றம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். சட்டப் பேரவை தலைவரும் அதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும், மக்கள் பிரச்சினையைப் பற்றி இப்பேரவையில் பேச வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தும், அதை ஏற்க மனமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவர் வெளியில் சென்று பேசுவது என்பது இந்தப் பேரவையினுடைய மாண்புக்கும், மரபுக்கும் ஏற்புடைய செயல் அல்ல.

பிரதான எதிர்க்கட்சியாகச் செயல்பட வேண்டிய அ.தி.மு.க. மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல், வீண் விளம்பரத்தைத் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால், நாம் இந்தத் துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு என்றார்.

Tags

Next Story