செம்பரம்பாக்கம் ஏரியை அ.தி.மு.க. அரசு நள்ளிரவில் திறந்து விட்டது! - மு.க.ஸ்டாலின்
செம்பரப்பக்கம்
பேரவையில் சாத்தனூர் அணை திறப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்!
‘‘யாரிடம் அனுமதி வாங்குவது என்று தெரியாமலேயே செம்பரம்பாக்கம் ஏரியை அ.தி.மு.க. அரசு நள்ளிரவில் திறந்து விட்டது’’ என்று முதல்வர் மு,.க.ஸ்டாலின் அவர்கள் அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று சாத்தனூர் அணை திறந்து விடப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் கழக அரசு மீது விமர்சித்து பேசினர்.
அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குறுக்கிட்டுப் பேசியதாவது
செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்ட காரணத்தால் மட்டுமல்ல; செம்பரம்பாக்கம் ஏரியை சொல்லாமல் திறந்துவிட்ட காரணத்தால்தான் பாதிப்பு ஏற்பட்டது. (மேசையைத் தட்டும் ஒலி) சென்னையே மூழ்கியது. ஏறக்குறைய 250 பேருக்குமேல் இறந்துபோயிருக்கிறார்கள். ஆனால், சாத்தனூர் அணையைப் பொறுத்தவரையில் 5 முறை வார்னிங் கொடுத்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அதற்குப்பிறகுதான் படிப்படியாகத் திறந்து விடப்பட்டிருக்கிறது. அதனால்தான் உயிரிழப்பின் எண்ணிக்கை 5, 6 என்ற அளவில் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. இதுதான் உண்மை. எனவே இது வெட்டவெளிச்சமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியக் கணக்காய்வுத் துறையினர் ஆய்வு செய்து, தங்களது அறிக்கையில்கூட தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்கும் போது, அரசு யாருக்கும் சொல்லாமல் திறந்து விட்டது என்று அவர்களும் தெளிவாக அறிக்கையிலே சொல்லியிருக்கிறார்கள். இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?
எடப்பாடி கே. பழனிசாமி:அடையாறு ஆற்றில் ஒரு இலட்சம் கனஅடி தண்ணீர் தடையில்லாமல் சென்று கடலில் கலக்கலாம். அப்படியெல்லாம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்த வெறும் 29 ஆயிரம் கனஅடிதான் தண்ணீர் திறக்க முடியும். அது எப்படி பாதிக்கும். 29 ஆயிரம் செம்பரம்பாக்கம் ஏரி. . . (குறுக்கீடு)
முதல்வர் மு.க. ஸ்டாலின்:நான் சொன்னதை அவர் புரிந்து கொள்ள வில்லை. சொல்லாமல், யாருக்கும் தெரிவிக்காமல் திறந்து விட்டார்கள். அதற்குக் காரணம்