எம்ஜிஆர் படம் கூடவா தெரியாம போச்சு - ட்ரோலான ஆம்பூர் அதிமுக 

எம்ஜிஆர் படம் கூடவா தெரியாம போச்சு - ட்ரோலான ஆம்பூர் அதிமுக 

அதிமுக பேனரில் அரவிந்த்சாமி 

ஆம்பூர் அருகே முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பிளக்ஸ் பேனரில் நடிகர் அரவிந்த்சாமி புகைப்படத்தை எம்ஜிஆர் என நினைத்து பிரிண்ட் செய்து வைத்தது  சமூக வலைதளங்களில் வெளியாகி கிண்டலுக்குள்ளானது. இதையடுத்து அரவிந்த்சாமி படத்தின் மீது  எம்ஜிஆர் புகைப்படத்தை ஒட்டி அதிமுகவினர் மறைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் ஒன்றியம் மேற்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 பிறந்த நாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது இதில் மாதனூர் ஒன்றியம் மேற்கு மாவட்டம் கீழ்மிட்டாளம் கிளை கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில் எம்ஜிஆர் புகைப்படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்த்சாமி புகைப்படத்தை பிரிண்ட் செய்து வைத்துள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதால் அதிமுகவினர் நடிகர் அரவிந்த்சாமி புகைப்படத்தின் மீது தற்போது எம்ஜிஆர் அவர்களின் புகைப்படத்தை ஒட்டியுள்ளனர்.

Tags

Next Story