பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித் ஷா ரோடு ஷோ
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தக்கலை மேட்டுக்கடை பகுதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் குமரி மாவட்டத்திற்கு இன்று வருகை தந்தார்.திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிபேடு தளத்தில் வந்திறங்கிய அவர், அங்கிருந்து கார் மூலம் தக்கலை மேட்டுக்கடை பகுதிக்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற ரோடு நிகழ்ச்சியில் பங்கேற்றார் இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து கையில் தாமரை சின்னத்துடன் வாக்குகளை சேகரித்தார்.
ரோடு ஷோ நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர் உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி தக்கலை பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது பாதுகாப்பின் ஒரு கட்டமாக ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது சிறப்பு கட்டுப்பாடு அரை அமைத்து பாதுகாப்பு பணிகளை போலீசார் கண்காணித்தனார். அமித்ஷா தேர்தல் பிரச்சாரத்தை தொடர்ந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.