தி.மு.க.வினரின் கபட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்: அண்ணாமலை

தி.மு.க.வினரின் கபட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்: அண்ணாமலை
X

annamalai

தி.மு.க.வினரின் கபட நாடகத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 80 அடி சாலையில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர், தி.மு.க.வை வேரோடு, மண்ணோடு அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு மக்கள் இருக்கிறார்கள். 2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. எனும் தீய சக்தியை வேரோடு அறுத்து தூக்கி எறிய வேண்டும். தவறினால் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. உலகத்தில் எங்கேயும் இல்லாத சாதனையை மத்தியில் 8 முறை திருச்சியை சார்ந்த தமிழ் பெண் பட்ஜெட் கொடுத்து இருக்கிறார். இதுவே சரித்திர சாதனை. இது வளர்ச்சியின் பட்ஜெட், இதுவரை முதல்வர் பட்ஜெட் குறித்து பேசியது இல்லை. ஆனால், மத்திய பட்ஜெட் குறித்து விமர்சிக்க கூட்டம் போடுகிறார்கள். இந்த் ஆண்டு 51 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போட்டப்பட்டுள்ளது. பெரிய பட்ஜெட்டாக போடப்பட்டுள்ளது. 2 லட்சத்து 20 ஆயிரம் தனிநபர் வருமானமாக வளர்ந்து இருக்கிறோம். வளர்ச்சி பாதையில் நம் நாட்டை மோடி அழைத்துக் கொண்டு இருக்கிறார். இந்தியாவில் 87 சதவீதம் பேர் வரி கட்ட வேண்டாம் என விலக்கு அளித்து இருக்கிறார்கள். இந்த இழப்பு 1 லட்சத்து 10 ஆயிரம் கோடியாகும். தமிழ்நாட்டிற்கு எதுவும் கொடுக்கவில்லை என முதல்-அமைச்சர் பேசுகிறார். காங்கிரஸ் ஆண்ட 10 வருட காலத்தில் வரி பகிர்மானம், 2004 முதல் 2014 வரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 900 கோடி நேரடியாக கொடுத்தது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சியில் 6 லட்சத்து 14 ஆயிரம் கோடி நேரடியாக கொடுத்து இருக்கிறார். அடுத்த 5 ஆண்டுகளில் 2030 முடியும் போது 2 லட்சம் பேர் மருத்துவம் படிப்பார்கள். காங்கிரஸ் ஆட்சியை விட 5 மடங்கு அதிகமாக நேரடி நிதியாக கொடுக்கிறோம். நான்கரை லட்சம் கோடி பாஜக ஆட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது. மோடி தமிழகத்திற்காக கொடுக்கிறார். தமிழக மக்கள் மீது உணர்வுபூர்வமாக வைத்துள்ள நம்பிக்கை மனிதர் மோடி. தண்ணீர், போக்குவரத்து, கழிவறை உள்ளிட்ட வசதிகள் குறித்து என்னிடம் மோடி கேட்டுக் கொள்வார். குற்றம் இருந்தால் டெல்லியில் இருந்து போனில் தொடர்பு கொண்டு பேசுவார். உதயநிதி ஸ்டாலின், மோடி வந்தால் இனி கெட் அவுட் மோடி சொல்வோம் என்கிறார். நீங்கள் சொல்லி பாருங்கள். கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி, இன்னும் கைது செய்யப்படவில்லை, தலைமறைவாக இருக்கிறார். இதே ஊரில் 20 வருடம் கழிப்பறையை பார்த்தது கிடையாது. சைக்கிள், பேருந்தில் போய் படித்தவன் நான். கல்வியின் பெருமை எனக்கு தெரியும். மோடி கல்விக்காக மட்டும் தான் என்னை மதிக்கிறார். 3-வது மொழியாக ஒரு விருப்பப்பட்ட மொழியை படியுங்கள் என்கிறார். இதில் எங்கே இந்தியை திணிக்கிறார். உங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக விருப்ப மொழியை படிக்க சொல்கிறார். அன்பில் மகேஷ் சொந்த ஊர் ராமநாதபுரத்தில் அரசுப் பள்ளியை இடித்து, மரத்துக்கு அடியில் போர்டு வைத்து படிக்கிறார்கள். ஆனால், அவர் பையன் பிரெஞ்சு படிக்கிறார். அரசுப் பள்ளி மாணவர்கள் ஹிந்தி படிக்க கூடாது என்கிறார்கள். 52 லட்சம் மாணவர்கள் 2 மொழி தான் படிக்கிறார்கள். தி.மு.க. நடத்தும் பள்ளிகளில் 3 மொழி, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 2 மொழி தான் படிக்கிறார்கள். தி.மு.க.வின் கபட நாடகத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில் 1 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் பள்ளி கல்வித்துறை பட்ஜெட் போட்டு இருக்கிறார்கள். ஆனால், மோடி 2190 கோடி கொடுக்கவில்லை என குற்றம் சாட்டுகிறார்கள். பெண்களுக்கு பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அசாமில் 830, மத்திய பிரதேசத்தில் 1250, சட்டீஸ்கரில் 1000, மஹாராஸ்டிராவில் 2100 உதவித் தொகை பெண்களுக்கு கொடுக்கிறோம். டெல்லியில் மகளிருக்கு 2500 ரூபாய் கொடுக்கிறார்கள். இங்கு உரிமை தொகை என்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சியில் அமரும் போது 2500 ரூபாய்க்கும் அதிகமாக கொடுப்போம். கமிசன் அடிக்காத கூட்டம் பா.ஜ.க. கூட்டம். எங்களிடம் இருந்து நியாயம், நேர்மையை உங்கள் வீட்டுக்கு கொண்டு வருகிறோம். கட்டுகோப்பான காவல் துறையை வீதியில் இறக்கி விட வேண்டும். பிஞ்சு குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை. 18 வயதுக்கே ஒன்னும் தெரியாத போது, 8 வயது குழந்தை மீது கை வைக்கிறார்கள். நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வருகிறார்கள். விஜய் நடத்தும் பள்ளியில் இந்தி இருக்கிறது. பா.ஜ.க. உங்களோடு இருக்கிறது. வருகின்ற காலகட்டத்தில் பா.ஜ.க.வுடன் இருங்கள், 2026 மாற்றம் இல்லை என்றால், எப்போதும் மாற்றம் இல்லை. தி.மு.க. சொந்தங்களுக்கும் சொல்லிக் கொள்கிறேன், 3 மொழியையும் படிக்க வையுங்கள். உங்கள் குழந்தைகள் பா.ஜ.க. தலைவர்களாக வர வேண்டும் என்று அவர் பேசினார்.

Tags

Next Story