அருணாச்சலப்பிரதேச விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்பிரச்சாரம்: பொன்.ஆர்

அருணாச்சலப்பிரதேச விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்பிரச்சாரம்: பொன்.ஆர்

பொன். ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு

அருணாச்சலப் பிரதேச விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றச்சாட்டியுள்ளனர்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மார்த்தாண்டம் அருகே பயணத்தில் இருந்து தேர்தல் பிரசா ரத்தை தொடங்கினார்.

விளவங்கோடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி உள்பட பாஜ மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். முன்னதாக அவர் பயணம் செண்பகவல்லி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.அங்கு பொன். ராதாகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்தும், செண்டை மேளம் முழங்கவும்,பட்டாசு வெடித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது.பயணத்தில் தொடங்கிய பிரசாரம் உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு,கொடுங்குளம், மார்த்தாண்டம்,

பம்மம்,சாங்கை,மாமூட்டு கடை, நட்டாலம் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் பிரசாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது அவர் பேசியதாவது,கச்சத்தீவு பிரச்னையை பொறுத்தவரையில் 1974ம் ஆண்டு துவங்கிய பிரச்னையில் பாஜ தான் முதலில் வழக்கு தொடுத்தது. ராமநாதபுரம் சேதுபதி மஹா ராஜாவுக்கு சொந்தமான நிலம் கச்சத்தீவு என்பதால் அது தமிழர்களுக்கு சொந்தமானது. கச்சத்தீவு பிரச்னை இருநாட்டு சம்மந்தமான விஷயம்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யமுடியாது. அருணாச்சல பிரதேச விவகாரத்தில் எதிர் . கட்சிகள் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்' என்றார்.

Tags

Next Story