திருவிடைமருதூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவிடைமருதூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கவன ஈர்ப்பு போராட்டம்

திருவிடைமருதூரில் 7வது ஊதிய குழு பரிந்துரைப்படி ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த ஓ எச் டி ஆபரேட்டர்களை பணி நிரந்தரம் செய்து காலம் வரை முறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஓ எச் டி ஆபரேட்டர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம் மற்றும் ஊதிய நிலுவைகளையும் வழங்க வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசாணைப்படி 5600 ஊதிய வழங்கிட வேண்டும் 2000 ஆம் வருடத்திற்கு முன் பணியமர்த்தப்பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசாணைப்படி மாத ஊதியம் 6860 யைவழங்கிட வேண்டும் பணி ஓய்வு பெறும் ஓஹச் டி துப்புரவு தொழிலாளர்களுக்கு பணிக்கொடை பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் தூய்மை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்கிட வேண்டும்

என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பி.ஜேசுதாஸ் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநில செயலாளர் சி.ஜெயபால் மாவட்ட துணை தலைவர் சா. ஜீவபாரதி, என்.பி நாகேந்திரன் மாவட்ட துணை செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் விளக்க உரை ஆற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் ஓ எச் டி ஆப்ரேட்டர்கள் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்

Tags

Next Story