திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாரத் இந்து முன்னணி அமைப்பிற்கு சென்னையில் பேரணி நடத்த அனுமதி தர முடியாது ! | கிங் நியூஸ் 24x7

தமிழ்நாடு அரசு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சென்னையில் பேரணி நடத்த அனுமதி தர முடியாது என்று பாரத் இந்து முன்னணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது என்றும் நீதிமன்றம் திட்டவட்ட மாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமதுஜின்னா, ஏற்கனவே திருப்பரங்குன்றம்உரிமை குறித்துபியூ கவுன்சில் வரை சென்று முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் அதன் பின்னர் அதுகுறித்து மீண்டும் பிரச்சினை எழுப்புவது சரியில்லை என்று தெரிவித்தார். மனுதாரர் கேட்டுள்ள பாதை என்பது போக்கு வரத்து நெருக்கடி நிறைந்த சாலை என்கிற காரணம் மட்டுன்றி, வேறுஎந்த இடத்திலும் பேரணிக்கு அனுமதிவழங்கினாலும் தேவையற்ற விரும்ப தகாதபிரச்சினையை உருவாக்கும் என்றும் வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, திருப்பரங்குன்றம் பிரச் சினைக்கும், சென்னைக்கும் என்ன தொடர்பு? தேவையில்லாமல் பிரச்சினையைஉருவாக்கப் பார்க்கிறீர்கள் என கண்டனம் தெரிவித்தார். சென்னையில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறி பாரத் இந்து முன்னணி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
