அரசியல் சாசனத்தை தகர்க்கும் வேலையை பாஜக செய்கிறது- மதுரை எம்பி

அரசியல் சாசனத்தை தகர்க்கும் வேலையை பாஜக செய்கிறது- மதுரை எம்பி

மதுரை எம்.பி சு.வெங்கடேசன் 

இந்தியா மிகப்பெரிய ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தை தகிர்க்கின்ற வேலையை மத்திய பாஜக அரசு செய்துக் கொண்டிருக்கின்றது. அதனை இந்திய மக்கள் விட மாட்டார்கள், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி, ரூபாய் 4.90 இலட்சம் மதிப்பிலான புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணியினை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வணிகவரித்துறை அமைச்சர்... இந்த புதிய பேருந்து நிலையம் மூலம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் முக்கிய வழித்தடத்தில் ரூபாய் 5 இலட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் இப்பகுதிகளில் உள்ள 206 கிராம மக்கள் பயன் பெற உள்ளனர் என்று தெரிவித்தார். மேலும், முல்லை பெரியாறு - வைகை அணையில் இருந்து மேலூர் ஒரு போக பாசனத்திற்கு 90 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விவசாய பணிகள் நடைபெற்று வருவதால் பாசனத்திற்காக தண்ணீர் 115 நாட்கள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றி உள்ளார். அவருக்கு இப்பகுதி மக்களின் சார்பாக நன்றி. வரும், நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே தற்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் வழக்கம் போல தமிழகத்திற்கான எந்த அறிவிப்பும் இல்லை. இரண்டு பெரும் வெள்ள அபாயத்தை சந்தித்துள்ள போதும் தமிழகத்திற்கு எந்த நிதியும் அறிவிக்கப்படவில்லை.

பணம் படைத்தவர்கள் வெறும் 30 சதவீதம் ஜிஎஸ்டி வரி கட்டி வரும் நிலையில், அடித்தட்டு மக்கள் 60 சதவீதம் வரி கட்டி வருகின்றனர். இதன் மூலம் மக்களிடம் இருந்து பணத்தை பறிக்கும் வழியை தான் மத்திய அரசு தொடர்ந்து செய்து வருகின்றது. இந்தியாவில் 15 எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி இருப்பதாக மத்திய அமைச்சர் கூறிவரும் நிலையில், அதோடு ஒரு செங்களையும் கட்டி இருப்பதாக நாங்கள் கூறி இருக்கின்றோம். தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் அடையாளமாகதான் மத்திய அரசின் பட்ஜெட் உள்ளது. இந்திய மிகப்பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தை தகிர்க்கின்ற வேலையை மத்திய பாஜக அரசு செய்துக் கொண்டிருக்கின்றது. அதனை இந்திய மக்கள் விட மாட்டார்கள், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அப்போது தெரிவித்தார்.

Tags

Next Story