பாஜக மதவாத அரசியலை கைவிட வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர்
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நடந்த அ.தி.மு.க., பிரமுகரின் இல்லத்திருமண விழாவிற்கு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், சபா நாயகருமான ஜெயக்குமார் வந்து மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ.க., மாதவதாம், இனம் அரசியலை கைவிட வேண்டும்.
இந்த அரசியலால் தான் வடமாநிலங்களில் மக்கள் பா.ஜ.கவுக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர். தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பு பா.ஜ.க., தனித்து, 400 இடங்கள் வெற்றி பெறுவோம் என மார்தண்டிக் கொண்டிருந்தனர்.
தற்போது, 240 இடங்களை மட்டுமே பெற்றுள்ளன. இதற்கு காரணம் மாதவாதம், இனம் அரசியல். பிரதமர் மோடிக்கு தற்போது கடிவாளம் போடப்பட்டுள்ளது. அவர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. இந்தியாவில், 52 லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர்.
இவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில், இன்று, 6600 பணியிடங்களுக்கு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 20 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தவுடன் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார். கடந்த, மூன்று ஆண்டுகளில் 6600 பேருக்கு மட்டுமே அரசு பணி வழங்குவதற்கு தற்போது தேர்வு நடத்தப்பட்டது.
விரைந்து தமிழகத்தில் உள்ள 3 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இ.பி.எஸ்., தலைமையிலான அ.தி.மு.க., பிளவுபடும் என கூறுகிறார். அவர் எங்கிருந்து வந்தார் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அமைச்சர் ரகுபதிக்கும், சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதனுக்கும் இடையே அவரது மாவட்டத்தில் உட்கட்சி பூசல் உள்ளது. நோட்டீஸ்,
கல்வெட்டு போன்றவையில் பெயர் போடுவதில், கோஷ்டி பிரச்னை உள்ளது. இவர்களுக்கு பிரச்னை முதலில் தீர்த்துக் கொண்டு, அதிமுக வைப்பற்றி பேச வேண்டும். முதல்வர் ஸ்டாலினை திருப்திப்படுவதற்கு அமைச்சர் ரகுபதி பேசி வருகிறார்.
அ.தி.மு.க., 52 ஆண்டுகளாக இயங்கி வரும் பெரிய கட்சி. இதை அழிக்க யாரும் முடியாது. வரும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சி பிடிக்கும். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ஜூன் 4ம் தேதிக்கு பின், அ.தி.மு.க., காணாமல் போய்விடும் என்று கூறினார். இன்று அவருக்கும் தமிழசை செளந்தர்ராஜனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதை முதலில் தீர்க்கட்டும் அண்ணாமலை. பின் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவது பேசட்டும். இவ்வாறு அவர் பேசினார்.