கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிப்பது பாஜக கொள்கை

கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிப்பது பாஜக கொள்கை
ராஜேஷ்குமார் எம் எல் ஏ பேட்டி
விஜயதரணி ராஜினாமா செய்த விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை. இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளரை டெபாசிட் இழக்க தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். பத்து வருடங்களாக கொல்லை புறமாக ஆட்சியை பிடிப்பது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கையாக உள்ளதுபல்வேறு எம்எல்ஏ களை குதிரை பேரத்தில் விலைக்கு வாங்கி ஆட்சியில் அமர்ந்து வருகின்றனர். இதற்கு எல்லாம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று குமரி திரும்பிய அவர், மாவட்டத்தில் உள்ள தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்துடன் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை, ராஜீவ் காந்தி சிலை, இந்திரா காந்தி சிலை மற்றும் அண்ணல் அம்பேத்கர் சிலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் கூறுகையில்:- கூட்டணி பேச்சுவார்த்தையானது சுமுகமாக நடைபெற்று வருகிறது. தொண்டர்களுக்கு மதிப்பளித்து நல்ல எண்ணிக்கை கிடைக்கும். மேலும் விஜயதரணி ராஜினாமா செய்த விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை. இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளரை டெபாசிட் இழக்க தொண்டர்கள் தயாராக இருக்கிறார்கள். மேலும் தொடர்ந்து பத்து வருடங்களாக கொல்லை புறமாக ஆட்சியை பிடிப்பது பாரதிய ஜனதா கட்சியின் கொள்கையாக உள்ளது. பல்வேறு எம்எல்ஏ களை குதிரை பேரத்தில் விலைக்கு வாங்கி ஆட்சியில் அமர்ந்து வருகின்றனர். இதற்கு எல்லாம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார்.

Tags

Next Story