இந்து மகா சபா சார்பில் வேட்பாளர் அறிவிப்பு
இந்து மகா சபா வேட்பாளர்
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இந்து மகா சபா சார்பில் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டார்.
தமிழக முழுவதும் ஒரே கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இந்த நிலையில் குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதரணி சமீபத்தில் பாஜகவில் இணைந்தார்.
மேலும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது.விளவங்கோடு தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ளது.
அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சியினர்,காங்கிரஸ் கட்சி யினர் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் அகில பாரத இந்து மகா சபா சார்பில் ஓம் பிரகாஷ் என்பவரை வேட்பாளராக மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
Next Story